பள்ளி படிப்பை முடித்த 97 வயது பாட்டி!

79 ஆண்டுகளுக்கு பிறகு 97 வயதில் படிப்பை பூர்த்தி செய்த மாணவி (பாட்டி)!

அமெரிக்காவில், மிச்சிகன் நகரில் வசிக்கும், மார்க்ரெட் தோம் பிகிமா, 97, 79 ஆண்டுகளுக்குப் பின், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். கத்தோலிக்கப் பள்ளியில் படித்து வந்த அவர், புற்றுநோயாளியான தன் தாயை பராமரிப்பதற்காக, 1936ல், படிப்பை துறந்தார்.

Margaret Thome Bekemaஅதன்பின், ராணுவத்தில் கிளார்க்காகவும், சிறார் காப்பக ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆனாலும், பள்ளி இறுதி வகுப்பை முடிக்காத ஏக்கம், அவருக்கு இருந்து வந்தது. இது, பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், மார்க்ரெட்டை பள்ளிக்கு அழைத்து, பள்ளிக் கல்வியை முடித்ததைக் குறிக்கும் வகையில், ‘கவுரவ பட்டயம்’ வழங்கியது.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், சுற்றத்தார் முன்னிலையில், ஆனந்த கண்ணீர் வழிய, மார்க்ரெட், பட்டயத்தை பெற்றுக் கொண்டார். தன், 79 ஆண்டு மனக்குறையை நீக்கிய பள்ளி நிர்வாகத்திற்கு, அவர், கைகூப்பி நன்றி தெரிவித்தார்.